தஞ்சை வைத்தியநாத சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தஞ்சையில் இரட்டை பைரவர்களுக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றது.தஞ்சாவூர் கீழவாசல் பூமாலை ராவுத்தன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மார்கழி மாத தேய்பிறையை முன்னிட்டு இரட்டை பைரவராக திகழும் யோக பைரவர் மற்றும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப் பட்டது.இத்தலத்தில் பக்தர்கள் பிரதி தேய் பிறை அஷ்டமி தினத்தில் ஒன்பது தீபமேற்றி இரட்டை பைரவர்களை வழிபட்டால் இரட்டிப்பு நற்பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.