உ.பி: பஸ்தி மாவட்டம் கேப்டன்கஞ்ச் கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒரு இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டான். அப்போது, 4 இளைஞர்கள் சேர்ந்து அச்சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்து வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர்கள் குறித்து சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அப்புகாரை ஏற்றுக்கொள்ள போலீசார் மறுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த சிறுவன் நேற்று (டிச.23) இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.