தஞ்சை: பொது மக்களுக்கு விருந்தளித்த ஊராட்சி மன்றத் தலைவர்
தஞ்சாவூர் அருகே நீலகிரி ஊராட்சித் தலைவராக இருப்பவர் வள்ளியம்மை. இவர் கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்நிலையில் இவரது பதவிக்காலம் இன்று (5ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதையடுத்து கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். துணைத் தலைவர் சிங்சரவணன், கவுன்சிலர் ரதி உஷா, தொழில் உரிமையாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.