குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், முடிவு கட்ட முடியவில்லை. இந்நிலையில், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு குழந்தை திருமணம் 56% அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 1,054 குழந்தை திருமணங்கள், இந்த ஆண்டில் இதுவரை 1,640 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதும் உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை, ஈரோட்டில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.