மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழ்க்கை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வயல்வெளிகளில் மின்கம்பங்கள் மிகவும் தாழ்வான நிலையில் செல்வதால் வயலில் விவசாய வேலைகள் செய்யும் போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பங்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.