ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

58பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்ன அரசருக்கு நாமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி