அரசமரம், ஆலமரம், வன்னிமரம், வேப்பமரம், சந்தன மரம் என பல மரத்தின் அடியிலும் அற்புதமாக வீற்றிருப்பார் பிள்ளையார். எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோகபலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யலாம். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம் ஆகியவற்றில் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.