திருவிடைக்கழி சுப்ரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

68பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவிடைக்கழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து வந்த செவ்வாய்க்கிழமை ஒட்டி இன்று காலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சிறப்பு அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கோவிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி