சீா்காழியில் மளிகைக் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சீா்காழி ரயில்வே சாலையில் மளிகைக் கடை நடத்தி வருபவா் பாண்டியன். இவா் தனது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
காவல் ஆய்வாளா் புயல். பாலச்சந்திரன், உதவி ஆய்வாளா் காயத்ரி, தனிப்பிரிவு காவலா் மூா்த்தி ஆகியோா் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் 16 கிலோ போதை புகையிலை பொருட்களை இருந்ததை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். பாண்டியனை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.