கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றால் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இந்த இரண்டு திட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. மேலும், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன் கொடுக்கப்படும் பரிசுத்தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.