நாகையில் கேரளா லாட்டரி விற்பனை செய்தவர் கைது

72பார்த்தது
நாகையில் கேரளா லாட்டரி விற்பனை செய்தவர் கைது
நாகையில் புரோட்டா மாஸ்டர் போர்வையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தவர் கைது; வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகளிடம் லாட்டரி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டார். நாகை அடுத்த நாகூரில் உள்ள தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக இருப்பவர் பாவா பகுருதீன். இவர் புரோட்டா மாஸ்டர் வேலை செய்வதுபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து கைகாட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பாவா பகுருதீனை கைது செய்த நாகூர் போலீசார் அவரிடம் இருந்த சிங்கம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வடவூர் பாலம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தென்மங்கலம் பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியனை வேளாங்கண்ணி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி