மாற்று திறனாளி குழந்தைகளை சுற்றுலா அனுப்பிய அரசு அலுவலர்கள்

81பார்த்தது
நாகையில் மாற்று திறனாளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்று அசத்திய அரசு அலுவலர்கள் ; சாக்லேட் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பதிலுக்கு ரோஜாப்பூ கொடுத்து மகிழ்ச்சியோடு சுற்றுலா சென்ற சிறப்பு குழந்தைகள்


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகளுக்கான ஒருநாள் கல்வி சுற்றுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி வேளாங்கண்ணி கிருஸ்துராஜா தொண்டு நிறுவனத்தின் மாற்று திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 44 பேர் இன்று சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். மாற்று திறனாளி குழந்தைகள் சுற்றுலா சென்ற பேருந்தை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கொடியசைத்து வழியனுப்பினார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் சாக்லேட்டை பெற்றுக்கொண்ட குழந்தைகள் பதிலுக்கு ரோஜாப்பூ கொடுத்து மகிழ்ச்சியோடு சுற்றுலா சென்றனர். பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு குழந்தைகளுக்கு அவர்களின் குறையை போக்கும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாற்றுத்திறனாளி துறை அலுவலர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி