குடிநீர் திட்டப்பணிகள் குறித்த விளக்கக்கூட்டம்

58பார்த்தது
திட்டச்சேரி பேரூராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் பணி குறித்த திட்ட செயலாக்க விளக்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா ஆபிதீன், திட்ட நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு உரிய விளக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி