நவி மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய யாசஸ்ரீ (20) கொலை வழக்கில் குற்றவாளி தாவூத் ஷேக்கை கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர். யாசஸ்ரீயை வியாழக்கிழமை முதல் காணவில்லை. வெள்ளிக்கிழமை இரவு சாலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. குற்றவாளி அவரது அந்தரங்க உறுப்புகளை வெட்டி கொலை செய்துள்ளார். யாசஸ்ரீ கொலைக்குப் பிறகு தாவூத் தலைமறைவானார். போலீசார் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இறுதியில் குற்றவாளி பிடிபட்டார்.