அமெரிக்காவில் 48 வயது ஜெனிபர் வில்சன் என்ற பெண்மணி தனது வளர்ப்பு மகன் தான் சொன்ன பேச்சைக் கேட்காததால் அவன் மீது ஏறி அமர்ந்துள்ளார். 154 கிலோ எடையுள்ள ஜெனிபர், சுமார் 5 நிமிடங்கள் அமர்ந்ததால், சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்நிலையில் வழக்குக் குறித்து விசாரித்த நீதிமன்றம் குற்றவாளி ஜெனிபருக்கு, 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.