பொதுத்தேர்வில் வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்திட வேண்டும் என ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்க, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பாடங்களான கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்களிடம் காரணங்களை கேட்டறிந்தார்.