தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே புங்கவர் நத்தத்தைச் சேர்ந்த போலிச்சாமியார் பாலசுப்பிரமணியன் (63) என்பவர் மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவரும், அவரது மகன் அய்யாதுரை (27) என்பவரும் சேர்ந்து, பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மக்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைப் பயன்படுத்தி ரூ.2.29 கோடி மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.