புத்தாண்டையொட்டி, MK Stalin அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ரூ.749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யவும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தியாகும். இப்படி சலுகை என்று சொல்லி வரும் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதனை மீறி கிளிக் செய்தால் உங்களது வங்கி கணக்கோ செல்போனோ Hack செய்யப்படலாம்.