லாரி மீது பைக் மோதிய விபத்து.. 2 பேர் பலி

56பார்த்தது
லாரி மீது பைக் மோதிய விபத்து.. 2 பேர் பலி
சேலம் மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி திடீரென பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமார் (30) மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் அந்த லாரியின் மீது மோதினர். இந்த கோர விபத்தில், சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, படுகாயமடைந்த சிவக்குமார், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி