பிரதமரான பின்னர் மோடி போட்ட முதல் கையெழுத்து..! (வீடியோ)

79பார்த்தது
292 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று கொண்டார். தற்போது பிரதமர் அலுவலகம் வந்த அவர், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் ‘கிசான் சம்மான்’ நிதி திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ.20 ஆயிரம் கோடியை பிரதமர் விடுவித்தார். ஆண்டுதோறும் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி