தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் ஒரு நபர் 2 பாம்புகளை கொன்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். உப்பள பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை அந்த பாம்பு கடித்துள்ளது. இதை குழந்தையின் பெற்றோரிடம் கூறியதையடுத்து, உடனடியாக அங்கிருந்த இரண்டு பாம்புகளையும் கொன்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பாம்பு பிடிப்பவர் சுமனை அணுகி பாம்புகளை பரிசோதித்ததில் அவை விஷப்பாம்பு இல்லை என தெரியவந்தது.