மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்றும் (அக். 22) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட கெளரவ தலைவர் ராஜா, இணை செயலாளர்கள் மகேந்திரன், நீதிமுத்தையா, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது எடை குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் அபராதத் தொகை உயர்த்தியதை குறைக்க வேண்டும், கூட்டுறவுத் துறை பதிவாளர்கள் உத்தரவுப்படி சோப்பு, மாவு, உப்பு, டீத்துாள் விற்க விற்பனையாளர்களை வலியுறுத்தக் கூடாது, அந்தந்த மாவட்டத்தில் கடைக்கு அருகே பணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.