உசிலம்பட்டியில் மின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

50பார்த்தது
உசிலம்பட்டியில் மின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்தாத வீட்டில் மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய பணியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து சங்க பணியாளர்களும் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

உசிலம்பட்டி மின் அலுவலக கேங்மேனாக பணியாற்றி வரும் ஸ்ரீகுமார்( 29) எ. புதுப்பட்டி மாயி (55) என்பவர் வீட்டின் மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு ஸ்ரீகுமாரை மாயி, மற்றும் மகன் சூரியபிரகாஷ் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து உத்தப்பநாயக்கனுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று காலை 9: 00 மணிக்கு அனைத்து சங்கங்களின் மின் பணியாளர்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மதியம் 2: 00 மணி வரை உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் தரப்பில் 'மாயி கைது செய்யப்பட்டார். அவரது மகனை விரைவில் கைது செய்வோம் என உறுதி தெரிவித்த பின் அனைவரும் பணிக்குச் சென்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you