கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி.

74பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் இணைந்து மதுரை மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறையினர் மற்றும் உசிலம்பட்டி காவல் துறையினருடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

இதில் சிம் கார்டு, வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் பெறப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், பார்ட் டைம் ஜாப், யூடூப் லிங்க் மூலம் பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர் என்றும் தேவையற்ற லிங்கை கிளிக் செய்யக் கூறினால் கிளிக் செய்யாதீர்கள் என்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என பல்வேறு விழிப்புணர்வு குறித்த வாசகங்களுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ஜோதி ராஜன் முன்னிலையில் மதுரை சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கருப்பையா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக தேவர் சிலையை வந்து அடைந்தது. பேரணியில் உசிலம்பட்டி டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர்கள் பிரியா, ஆனந்த், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி