மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபம் திருவிழா தொடங்கியது திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று ( டிச. 7) இரவு அன்னவாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வீதியுலாவின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.