கல்வி வளர்ச்சி நாளில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள்.

70பார்த்தது
மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு சூர்யா என்ற தனியார் பள்ளியில் மாணவர்கள் பரத நாட்டியம் , நாடகம் நடித்துக் காட்டினர் பின்னர் மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

" அனைவருக்கும் கல்வி வேண்டும். முதியோருக்கு உதவி செய்வோம்.
கல்வி கற்று பெரிய தலைவர்களாக வருவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து மாணவர்கள் மாலை மற்றும் பூக்களுடன் செம்பூரணி ரோடு வழியாக ஊர்வலமாக சென்று அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
விழாவிற்கு சூர்யா பள்ளி தாளாளர் ரஞ்சனி தலைமை வைத்தார் மற்றும் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் உதயசூரியன் கலந்து கொண்டார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக மாணவர்கள் உறுதி மொழியுடன் ஊர்வலமாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி