திருப்பரங்குன்றத்தில் பெருமுருகன் வள்ளி திருமண விழா கோலாகலம்

649பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் குறிஞ்சி நிலத்து குறவர் குடி மக்கள் சார்பாக குறிஞ்சி பெருமுருகன் வள்ளி திருமணவிழா நடைபெற்றது.

தேன், தினை மாவுடன். மா, பலா, வாழை முக்கனிகளுடன் 51 சீர்வரிசை தட்டுகள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மணமகள் (குறவள்ளி) வீட்டார் சார்பாக சீர்வரிசை கொடுத்து திருமண விழா நடைபெற்றது

சீர்வரிசைகளை பாரம்பரிய முறைப்படி காவடி ஆட்டம். சிலம்பாட்டத்துடன் சன்னதி தெரு வழியாக ஊர்வலமாக கோவில் சென்று வழிபட்டனர்

குறிஞ்சி பெருமுருக திருவிழா வழிபாடு அறக்கட்டளை வழிப்பாட்டு அறக்கட்டளை சார்பாக குறிஞ்சி பெருமுருக வள்ளி திருமண திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழகத்திற்கு பெருமை சேர்த்து அர்ஜீனா விருது பெற்ற பாடிபில்டர் பாஸ்கரன் அவர்கள் பெருங்குறவர் முருகரின் மனைவியான வள்ளி பிராட்டி அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.

மேலும் தமிழ் கடவுளாக வணங்கக்கூடிய பெருங்குறவர் முருகனுக்கும் வள்ளி பிராட்டிக்கும் தான் சார்ந்த சமுதாய பாரம்பரை முறைப்படி கோவிலில் திருமண நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேரளா ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருந்து 1000- க்கும் மேற்பட்ட குற இன மக்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி