இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட உள்ளது என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர் மற்றும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்த விருதுக்கு பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நாளை நடைபெற உள்ள பிசிசிஐ விருது விழாவில் பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட உள்ளது.