தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசிக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்துள்ள ஆதவ் அர்ஜுனாக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும், அதிமுகவில் இருந்து விலகிய CTR.நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு) பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.