திருப்பூர்: அவிநாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கிராம தலைவர்கள் கூட்டத்தில் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக தகவல் தராமல் கூட்டம் நடத்தியதால், கமிட்டி தலைவர் கோபிநாத்திடம் கமிட்டி நிர்வாகிகள் கேள்வியெழுப்பினர். மேலும், நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கியது தொடர்பாக சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியதால் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.