15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை அளித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மோகன் விக்னேஷ் (30) என்ற இளைஞர், தன் உடன் வேலை செய்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறார் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், கடத்தல் ஆகிய குற்றங்களில் மோகன் விக்னேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.