தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தீவிரமான விஜய் ரசிகர் ராஜா மாற்றுத்திறனாளி ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை (அக். 27) நடைபெறும் தவெக மாநாட்டிற்கு ஒற்றை காலில் சைக்கிளில் செல்கிறார். ராஜா கூறுகையில், “சாலை விபத்தில் என் ஒரு காலை இழந்தேன், ஆனாலும் தன்னம்பிக்கையுடன் என் பணியை செய்கிறேன். தவெக மாநாடு வெற்றி பெற சைக்கிளில் செல்கிறேன்” என கூறியுள்ளார்.