மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆரன் ரவி நேற்று(செப்.28) காலை விமான மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து மதுரை விரகனூர் பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
இக்கல்லூரியில் பயின்ற 7 துறையை சேர்ந்த இளங்கலை பட்டதாரி மாணவர்கள் 454 பேருக்கு பட்டங்களை ஆளுநர் ஆர் என் ரவி வழங்க பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் மாணவர்களிடம் பேசுகையில்
எனதருமை இளைய நண்பர்களே இது உங்கள் தினம், நீங்கள் கடின உழைப்பு மூலம் வந்துள்ளீர்கள். உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களை பெருமை பட வைத்துள்ளீர்கள். நீங்கள் படித்து பட்டத்தை பெற்று வாழ்க்கை பாதைக்குள் வந்துள்ளீர்கள்.
பட்டம் பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் தேசத்தின் பெருமை. நீங்கள் உங்கள் கனவை சிறிதாக வைக்க வேண்டாம் பெரிய அளவில் கனவு காணுங்கள். மாணவர்களை உங்களுடைய நாள் உங்களுடைய கடின உழைப்பிற்கான நாள்
உங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தக்கூடிய நாள் நமக்கு சிறந்த கனவுகளோடு உள்ள பிரதமர் இருக்கிறார். நாட்டை மேம்படுத்தும் சில திட்டங்களுடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார்
உங்கள் அனைவரின் இடத்திலும் நான் தேசத்தின் எதிர்காலத்தை பார்க்கிறேன் என்றார்.