திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: மயங்கி விழுந்த சேல்ஸ் மேனேஜர் மரணம்

திருமங்கலம்: மயங்கி விழுந்த சேல்ஸ் மேனேஜர் மரணம்

மதுரை நகர் செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு இந்திரா நகர் 2வது தெருவில் வசிக்கும் கருப்பையாவின் மகன் செல்வராஜ் (47) என்பவர் திருமங்கலம் அருகே உள்ள திண்டுக்கல் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிட்கோ அருகேயுள்ள டிவிஎஸ் தனலட்சுமி கார் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்தார்.  இவர் வழக்கம் போல நேற்று (பிப். 21) காலை வேலைக்கு சென்ற இடத்தில் காலை 9.45 மணியளவில் திடீரென வாந்தி எடுத்து மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக கம்பெனி காரில் அழைத்துக் கொண்டு திருநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ராஜ மனோகரி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా