மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகள் முழுவதும் திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் முன்மொழி கல்வி அரசு பள்ளி மாணவர்கள் பயில கூடாது என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் அண்ணாமலைக்கும் வார்த்தை போரானது தொடங்கியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதலமைச்சர் உதயநிதி தமிழர்களின் உரிமைகளை பறிக்க முயன்றால் இந்த முறை கெட் அவுட் மோடி என்று தமிழர்கள் துரத்துவார்கள் என்றார்.
"கெட் அவுட் மோடி"யா அல்லது "கெட் அவுட் ஸ்டாலினா" எது இணையத்தில் வைரலாகும் என்று சவால் விடுத்திருந்த நிலையில் பாஜகவினர், திமுகவினர் மாறி மாறி கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தை இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கெட் அவுட் மோடி என்ற வாசகங்கள் பிரதமர் மோடி ஓடுவது போல் கார்ட்டூன் புகைப்படம் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.