
திருமங்கலம்: 7ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்; தந்தை புகார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராயபாளையம் பகுதியில் வசிக்கும் திருஞானம் என்பவரின் 14 வயது மகன் திருமங்கலத்தில் உள்ள பி கே என் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று (பிப். 2) முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை திருமங்கலம் தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் காணாமல் போன பள்ளி மாணவனை தேடி வருகின்றனர்.