மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு நேற்று (டிச. 26) முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் புதல்வர் திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை வழங்க வருகை தந்தவருக்கு அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பூக்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் கிரேன் மூலம் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது தொடர்ந்து அம்மா கோவிலில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ். பிவேலுமணி, ஆர். பி. உதயகுமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பின்னர் திருமண பத்திரிக்கையை வேலுமணி வழங்கினார்.