திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: 53வது அதிமுக ஆண்டு விழா கொண்டாட்டம்

திருமங்கலம்: 53வது அதிமுக ஆண்டு விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி. குன்னத்தூர் உள்ள அம்மா கோவிலில் அதிமுகவின் 53 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திருவுருவ வெங்கல சிலைகளுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் நேற்று (அக். 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து புரட்சித் தலைவர் புகழ் வாழ்க புரட்சித்தலைவி புகழ் வாழ்க கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தை விட இப்பொழுது தான் அதிகமாக உழைத்து வருகிறது. இன்றைக்கு திமுக சோர்ந்து போய் உள்ளது அதிமுக எழுச்சியாக உள்ளது என்றார். இந்த 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக கட்சி நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டதால் தான் வளர்ச்சி அடைந்துள்ளது என சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా