திருமங்கலம் தபால் நிலையம் முன்பு நேற்று மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்தும் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கட்சி நிர்வாகிகள் கட்சியின் பல்வேறு அமைப்பின் நிர்வாகுகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.