மதுரை மாவட்டம் மேலூர் அருகே நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவிகள் இருவரை அறிவுரை கூறி மீண்டும் பள்ளியில் படிக்க சேர்க்கப்பட்டனர்.
அனைத்து குழந்தைகளும் பள்ளியில் என்ற திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுரையின்படி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் முன்னிலையில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் இ மலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிவீரன்பட்டி குடியிருப்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவிகள் சரண்யா மற்றும் ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பு முடித்து 11ஆம் வகுப்பில் சேராமல் இருந்த சாத்தம்மாள் என்ற மாணவி ஆகிய மூவரையும் அரசு மேல்நிலைப்பள்ளி இ மலம்பட்டியில் நேற்று சேர்க்கப்பட்டனர்.
உடன் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் ஈஸ்வரி இருந்தனர்.
முன்னதாக உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். பெற்றோர்களிடம் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேற்பார்வையாளர் சுதா, லட்சுமி ஆசிரியர் பயிற்றுநர் சதீஷ்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.