மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் கடைபிடிக்க படவேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ. கா. ப. , அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகர எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் மாசி வீதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஊர்வலத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, போக்குவரத்து மற்றும் தலைமையிடம் ஆகியோர் கலந்து கொண்டனர்.