பத்திரப்பதிவுக்கு மறுப்பு; பதிவாளருக்கு அபராதம்

74பார்த்தது
பத்திரப்பதிவுக்கு மறுப்பு; பதிவாளருக்கு அபராதம்
கடம்பூர் பாண்டி மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒரு சொத்து தொடர்பான விற்பனை பத்திரத்தை பதிவு செய்யக்கோரி, கடம்பூர் சார் - பதிவாளரிடம் விண்ணப்பித்தேன். சொத்து தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிவு செய்ய இயலாது எனக்கூறி நிராகரித்தார். அவரின் செயல் சட்டவிரோதமானது. நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணமாக கூறி பத்திரத்தை பதிவுசெய்ய மறுக்கக் கூடாது என, பதிவுத்துறை ஐ. ஜி. , சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மனுதாரர் அணுகியபோது ஆட்சேபனை இருப்பதாக கூறி, சார் - பதிவாளர் பதிவுசெய்ய மறுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் செயல்பட்ட சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு, 25, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தொகையை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்திலுள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி