வாரச்சந்தை தடை உத்தரவு; வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

72பார்த்தது
மதுரை தல்லாகுளம் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தை மதுரை மாவட்ட ஏ ஐ டி யூ சி உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மாநகர் தபால் தந்தி நகரில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வரும் 29 ஆம் தேதி முதல் வாரச்சந்தை நடைபெறுவதை தடை செய்து மண்டல உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த நிலையில் தபால் தந்தி நகர் வாரச்சந்தை மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது எனவும், குடியிருப்போர் நல சங்கம் என்ற பெயரில் தவறான தகவல்களை கொடுத்து வார சந்தையை நிரந்தரமாக மூட நினைக்கிறார்கள் எனவும், காய்கறி வியாபாரத்தை நம்பி இருக்கக்கூடிய சாலையோர சிறு வியாபாரிகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, தபால் தந்தி நகர் வாரச்சந்தை தொடர்ந்து இயங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி