மதுரையில் ஹென்றி திபேன் பேட்டி

82பார்த்தது
மதுரையில் ஹென்றி திபேன் பேட்டி
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணை மேற்கொண்ட அறிக்கையை மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்டது, 2023 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் ஏ. எஸ். பி யாக பணிபுரிந்த பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பாக அமுதா ஐஏஎஸ் நேரடி விசாரணை மேற்கொண்டார்.

அமுதா ஐஏஎஸ் தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்த 33 பக்க இடைக்கால உயர்மட்ட விசாரணை அறிக்கையின் நகல் நீதிமன்ற ஆணைப்படி பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை அறிக்கையினை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் "அமுதா ஐஏஎஸ் அறிக்கை என்பது இடைக்கால அறிக்கையாக மட்டுமே வந்துள்ளது. இதனை ஏன் ரகசியமாக வைத்திருந்தார்கள் என்பதை அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது, சிசிடிவி காட்சிகள் இருந்தும் அது அழிக்கப்பட்டுள்ளது.இந்த அரசு சமூக நீதி அரசு என்றால் வெளிப்படைத்தன்மை வேண்டும் மறைத்து வைத்திருப்பது அரசுக்கு சரியாக இருக்காது, இந்த அறிக்கையில் அரசு வழக்கறிஞர், அரசு மருத்துவர் தொடங்கி ஏராளமானோர் தொடர்பு உள்ளதால் அந்த அறிக்கையை தர மறுத்துள்ளனர்" என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி