மதுரை ரயில் நிலையத்திலிருந்து கூடல் நகர் ரயில் நிலையம் வரை உள்ள ரயில் பாதையில் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளதால் இப்பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.