அதிமுக இளைஞரணி நிர்வாகியை மிரட்டும்: செல்லூர் ராஜூ

58பார்த்தது
அதிமுக இளைஞரணி நிர்வாகியை மிரட்டும்: செல்லூர் ராஜூ
அதிமுக இளைஞரணி நிர்வாகியை மிரட்டும் செல்லூர் ராஜூ

மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு. வெங்கடேசன், பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசன், அதிமுக சார்பில் மருத்துவர் சரவணன் வேட்பாளர்களாக களமிறங்கினர். சு. வெங்கடேசன் தேர்தலில் வெற்றி பெற்றார். பாஜகவிற்கு இரண்டாம் இடம் கிடைத்தது, அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு எதிராக செல்லூர் ராஜூ செயல்பட்டு, மூன்றாம் இடத்திற்கு அதிமுக சென்று விட்டதாக, மதுரை வந்த எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி மற்றும் ராஜூவின் முன்னாள் உதவியாளர் ராமசுப்பிரமணியன் புகார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி