சோழவந்தான்: கண்மாய்க்குள் கட்டியிருந்த வீடுகள் இடிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனுார் புதுக்குளம் கண்மாய்க்குள் கட்டியிருந்த வீடுகளை நேற்று (அக். 22) நீர்வளத்துறையினர் அகற்றினர். இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப், உதவி பொறியாளர் சுபாஷினி கூறுகையில், 128 ஏக்கர் பரப்பளவுடைய இக்கண்மாய்க்கு பெரியாறு வைகை முதலாம் பாசன கால்வாய் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. முதல் பிரிவின் 15 வது மடை வழியே 45 ஏக்கர் பாசனம் பெறும் நிலையில் அப்பகுதியில் 5 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. 15 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தனர். இந்த வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது என்றனர்.