வட மாநிலத்தவர்கள் கொண்டாடிய விஸ்வகர்ம விழா

69பார்த்தது
வட மாநிலத்தவர்கள் கொண்டாடிய விஸ்வகர்ம விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள் விஸ்வகர்ம பூஜைகளை செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் வருடம் தோறும் ஆயுத பூஜை கொண்டாடுவது போல் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா பூஜை செய்து வருகின்றனர். இந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் விரதம் இருந்து விஸ்வகர்ம சுவாமி படத்தை வைத்து அலங்கரித்து, வண்ண மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நேற்று(செப்.17) மாலை தாங்கள் வேலை பார்ப்பதற்கு அருகில் உள்ள வைகை ஆற்றுக்குச் சென்று மண்பானையில் தண்ணீர் நிரப்பி வைத்து பூஜைகள் செய்து பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்தனர்.

பின்பு விஸ்வகர்மா படத்தின் முன்பாக மண்பானையில் கொண்டு வந்த தண்ணீரை வைத்து விஸ்வகர்மா சுவாமி வரைந்த பொம்மையை வைத்து ஆடைகள் அணிவித்து பூமாலையால் அலங்கரித்தனர்.

இவர்கள் வேலை செய்யக்கூடிய ஆயுதங்கள் அனைத்தையும் அலங்காரம் செய்யப்பட்ட இடத்தின் முன்பு வைத்து சந்தனம் குங்குமம் வைத்து பூ மாலை அணிவித்து வங்காள மொழியில் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர். இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி