நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனம்.. பொதுமக்கள் அவதி.

82பார்த்தது
நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனம்.. பொதுமக்கள் அவதி.
மதுரை மாவட்டம் தேனூர் பகுதியில் ஆமைவேக சாலை பணியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் தேனூர் - சமயநல்லூர் பகுதியில் குழாய் பதிப்பதற்காக சேதப்படுத்தப்பட்ட சாலையை சீரமைக்கும் பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. மெத்தனமாக வேலை நடைபெற்றால் பணி முடிய ஒரு மாத காலங்களுக்கு மேலாகும் என தெரிகிறது.

அந்த வழியில் செல்ல இயலாத தேனூர் பொதுமக்கள் மட்டுமின்றி பிற ஊர் மக்களும், பள்ளி மாணவர்களும் பாதிப்படைந்து வருகின்றனர். பேருந்துகளின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் மாற்றுப் பாதையில் செல்கின்றன.

சமயநல்லூரில் இருந்து சேம்பர், தேனூர், மேலகால் பாலம், சாய்பாபா கோவில், திருவேடகம், தச்சம்பத்து விவேகானந்தா கல்லூரி மற்றும் பள்ளி, சோழவந்தான் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

அதேபோல் தேனூரிலிருந்து சமயநல்லூர், பரவை, பாத்திமா கல்லூரி மற்றும் மதுரை செல்வோரின் நிலைமையும் திண்டாட்டமாகத்தான் உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் தினம் தோறும் வெகு தூரம் நடந்து சென்று சிரமப்படுகிறார்கள்.

ஆகையால் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு சாலை வேலையை வெகு வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி