மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி செல்லும் பாதையில் முனியாண்டி கோவில் பகுதியில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி சென்ற அரசு நகர் பேருந்தும் கருப்பட்டியிலிருந்து மதுரையை நோக்கி சென்ற அரசு நகர் பேருந்தும் இன்று(செப்.16) நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் பயணம் செய்த 10க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்காலிக பணியாளர் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தை ஒட்டியதே விபத்திற்கு காரணம் என பயணிகள் கூறினர். சோழவந்தான் முதல் இரும்பாடி வரை உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டி பொதுமக்கள் பல தடவை அரசிடம் முறையிட்ட பின்பும் இதுவரை சாலையை அகலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போக்குவரத்துக் கழகத்திற்கு பணியாளர்களை நியமிக்காததால், தற்காலிக பணியாளர்கள் கொண்டு பேருந்து இயக்கி வரும் போக்குவரத்து கழகங்கள் தற்காலிக பணியாளர்கள் முறையாக பேருந்தை இயக்காமல் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்து இயக்குவதால் விபத்து நடந்ததாக பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.